தெற்கு கடலில் கைதான வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு கொரோனா !

3,100 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 336 கிலோகிராமுக்கும் மேற்பட்ட ஹெரோயின் போதைப் பொருளுடன் தெற்கு கடலில் கைதான வெளிநாட்டு படகிலிருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் இந்த சுற்றிவளைப்பின்போது நான்கு பாகிஸ்தான் பிரஜைகளும்,மூன்று பலுகிஸ்தான் பிரஜைகளும் கைது செய்யப்பட்டனர்.

அத்தோடு அவர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டதன் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

காவல்துறை, கடற்படை மற்றும் புலனாய்வு பிரிவினர் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது 1,370 கிலோமீற்றர் தொலைவில் சர்வதேச கடல் எல்லையில் குறித்த படகு கைப்பற்றப்பட்டது.எனினும் இந்நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *