ரயில் பயணிகளுக்கு முக்கிய தகவல்!

நாட்டின் தற்போதைய நிலையில் ரயில் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படக் கூடாது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரட்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் விலை உயர்வுக்கு அனுமதி வழங்குவது நெறிமுறைக்கு புறம்பானது. அத்துடன் அரசாங்கம் மீதான நம்பிக்கையை பொதுமக்கள் மேலும் இழக்க நேரிடும்.

எனவே ரயில் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதனை தவிர்த்து செயற்படுமாறு ஜனாதிபதி மற்றும் போக்குவரத்து அமைச்சரிடம் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply