திருகோணமலை மாவட்டம், கந்தளாய் வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட வெண்ட்ராசன்புர மகா வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் வருடாந்த ஒதுக்கீட்டின் கீழ், 15 மில்லியன் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டிடம் மாணவர்களின் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாக (11) திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் வருடாந்த நிதி ஒதுக்கீட்டின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டிடம், பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கந்தளாய் பிரதேச சபையின் தவிசாளர் தாரக சந்தருவன், வலயக் கல்விப் பணிப்பாளர், கல்வித் திணைக்கள அதிகாரிகள், பாடசாலை நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
புதிய வகுப்பறைக் கட்டிடம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது



