இரவில் கிராமத்திற்குள் புகுந்த ஆபத்து; வீடுகள் உட்பட பெருமளவு சேதம் – மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தல்!

கந்தளாய், சீனிபுர கிராமத்திற்குள் நேற்று (18) புகுந்த காட்டு யானைகளால் இரண்டு வீடுகள் உள்ளிட்ட பெருமளவிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது சுமார் 10 தென்னை மரங்கள், பலா மரங்கள் மற்றும் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வெள்ளாமைப் பயிர்கள் ஆகியவற்றையும் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன.

சமீபகாலமாக மனித – யானை மோதல்களால் பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், மீண்டும் மனித உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

காட்டு யானைகளின் தொடர்ச்சியான ஊடுருவலால் வீடுகள், விவசாயப் பயிர்கள் மற்றும் ஏனைய சொத்துக்களுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டு வருவதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, சீனிபுர கிராமத்திற்குள் காட்டு யானைகள் நுழைவதைத் தடுப்பதற்கும், மக்களின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கமும் வனஜீவராசிகள் திணைக்களமும் உடனடியாகத் தலையிட்டு நிரந்தரத் தீர்வொன்றை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply