மட்டக்களப்பு ,கல்முனை, ஏறாவூர் பகுதிகளில் ஒரு மாதத்திற்குள் தொடர்ச்சியாக மூன்று பெண்களை காணவில்லை – பொலிஸார் தீவீர விசாரணை

மட்டக்களப்பு இகல்முனைஇ ஏறாவூர் பகுதிகளில் ஒரு மாதத்திற்குள் தொடர்ச்சியாக மூன்று பெண்கள் காணாமல் போயுள்ளனர். இது மக்கள் மத்தியில் அச்சத்தையும் பல கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது

கடந்த ஒரு மாதத்திற்குள் மட்டக்களப்பு கல்லடியில் தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்ற யுவதி கடந்த மாதம் வீடு திரும்பவில்லை அவர் தொடர்பாக இதுவரை எந்த தகவலும் இல்லை , சில திகங்களுக்கு முன்னர் கல்முனையைச் சேர்ந்த குடும்ப பெண் ஒருவரை காணவில்லை என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது . இன்று ஏறர்வூரில் 19 வயது யுவதி ஒருவரை காணவில்லை என முறைப்பாடு பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.

பொலிஸார் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கவும் காணாமல் போனதற்கான காரணத்தை கண்டறியும் செயற்பாட்டை மேலும் தீவிரப்படுத்ததுமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தி – 01

மட்டக்களப்பு உப்போடை கல்லடியில் வசித்துவரும் தேவகுமாரன் லக்ஷனியா எனும் 19 வயது யுவதி மட்டக்களப்பு தனியார் கற்கை நிலையத்துக்கு சென்றவர் பின்னர் வீட்டுக்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 26 ஆம் திகதி முதல் இவரை காணவில்லை எனவும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் குறித்த யுவதியின் தந்தை தெரிவித்தார்.

பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் தொடர்பாக விபரங்கள் அறிந்தால் இந்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அல்லது பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

0776545471

செய்தி – 02

கல்முனையில் மூன்று பிள்ளைகளின் தாய் 5 நாட்களாகக் காணவில்லை: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

பாறுக் ஷிஹான்

கல்முனையிலிருந்து யாழ்ப்பாணம் – நெல்லியடிப் பகுதிக்குச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகம்
தகவல் அறிந்தோர் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு குடும்பத்தினர் உருக்கமான வேண்டுகோள்

அம்பாறை மாவட்டம், கல்முனைப் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கடந்த 5 நாட்களாகக் காணாமல் போயுள்ளதாகக் கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் அவரது கணவரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போனவர் தொடர்பான விவரங்கள் வருமாறு:

காணாமல் போனவரின் விபரம்:

பெயர்: சுப்ரமணியம் கற்பகக்கரசு

முகவரி: இல. 29/2, கடற்கரை வீதி, கல்முனை – 2A

குடும்ப விபரம்: மூன்று பிள்ளைகளின் தாய் (14 வயதுடைய ஒரு பெண் பிள்ளை, 10 வயதுடைய ஆண் பிள்ளை மற்றும் 6 வயதுடைய ஆண் பிள்ளை).

கல்முனையிலுள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறிய இவர், இதுவரை வீடு திரும்பாத நிலையில் யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதிக்குச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கணவரினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய கல்முனை தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மூன்று சிறு பிள்ளைகளின் தாயான இவரைப் பற்றிய ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் உடனடியாகக் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறிவித்து உதவுமாறு குடும்பத்தினர் பொதுமக்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்பு இலக்கங்கள்: 071 419 6223 / 074 278 1199

செய்தி – 03

ஏறாவூரைச் சேர்ந்த 19 வயது யுவதியைக் காணவில்லை

மட்டக்களப்பு, ஏறாவூர் , புன்னக்குடா வீதி, தளவாய் யைச் சேர்ந்த 19 வயது யுவதி சசிகரன் சஞ்யுதா என்பவரை காணவில்லை என அவரது தாய் சரோஜாதேவி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனது மகளை கடந்த 12-11-2026 அன்று இரவு 7.45 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார். அதன் பின்னர் இன்று வரை அவரைப் பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என தாய் கூறியுள்ளார். இவரைப்பற்றி தகவல் அறிந்தவர்கள் 0755106546, 0750615620 என்ற கையடக்க தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுமாறு அறியத்தருகின்றோம்.

Leave a Reply