கிளிநொச்சி, ஆனையிறவு புகையிரதப் பாதையில் இரும்பு ஆணிகள் திருட்டு; பொலிஸார் தீவிர விசாரணை!

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் அமைந்துள்ள புகையிரதப் பாதையில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு ஆணிகள் இனந்தெரியாத நபர்களினால் களவாடப்பட்டுள்ளன.

புகையிரதத் தண்டவாளங்களைப் பாதுகாப்பாகப் பொருத்தி வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் குறித்த இரும்பு ஆணிகள் கழற்றி எடுக்கப்பட்டுத் திருடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. புகையிரதப் போக்குவரத்தின் பாதுகாப்பிற்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பாகப் புகையிரத திணைக்களத்தின் பாதுகாப்புப் பிரிவினரும், கிளிநொச்சி பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். 

Leave a Reply