காலி மாவட்டத்தின் ரத்கம, மாலிதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானமொன்றில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், மரணத்திற்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



