ஞானச்சுடர் 347 ஆவது இதழ் வெளியீடு! மாணவர்களுக்கு கிடைத்த உதவிகள்!

யாழ்ப்பாணத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில், ஆறு துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மடிக்கணினி உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

வடமராட்சி தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில், மொத்தம் 456,000 ரூபாய் பெறுமதியான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி செ. மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆச்சிரமத்தின் மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் இதழின் 347 ஆவது மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இதன்போது, பல்வேறு பாடசாலைகளில் கல்வி கற்கும் ஆறு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும், தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவருக்கு 135,000 ரூபாய் பெறுமதியான மடிக்கணினியும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஆச்சிரம நிர்வாகிகள், தொண்டர்கள், அடியவர்கள், பயனாளிகள் மற்றும் ஞானச்சுடர் வாசகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply