கடும் மழையால் திறக்கப்பட்ட நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள்! – மக்களுக்கு கடும் எச்சரிக்கை

கண்டி, தெல்தோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (26) இரவு பெய்த கடும் மழையையடுத்து, கலஹா மற்றும் நில்லம்பை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, இன்று (27) காலை குறித்த நீர்த்தேக்கத்திலிருந்து அதிகளவிலான நீர் வெளியேறுவதைக் காணக்கூடியதாக இருந்தது.

தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் நீர்த்தேக்கத்தின் கீழ்ப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply