இன்று (27) ஸ்ரீ சத்யசாயி சஞ்சீவனி வைத்தியசாலையில் இரத்ததான முகாம்!

( வி.ரி.சகாதேவராஜா)

 மட்டக்களப்பு கிரான்குளம் ஸ்ரீ சத்ய சாயி சஞ்சீவனி வைத்தியசாலையில் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 101ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் இன்று (27) வெள்ளிக்கிழமை  சிறப்பாக நடைபெற்றது.

 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் ஒத்துழைப்புடன் இம்மாபெரும் இரத்ததான முகாம் சஞ்சீவினி வைத்தியசாலையின் பொது முகாமையாளர் டேவிட் சில்வெஸ்டர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெருந்தொகையான இளைஞர்கள் இதில் பங்கேற்றனர். தானம் வழங்கியவர்களுக்கு சாயி திறப்பு கோர்வை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

“இரத்த தானம் – ஒரு உயிரைக் காக்கும் மகத்தான தானம்” என்ற உயரிய நோக்குடன் நடைபெறும் இம்முகாமில் வழங்கப்படும் இரத்தம், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களின் உயிரைக் காப்பதற்கு பெரிதும் உதவியாக அமையும் என பொது முகாமையாளர் டேவிட் தெரிவித்தார்.

Leave a Reply