கல்முனையில் தாதிய பரிபாலகர் சசிதரனுக்கு நெகிழ்ச்சியான பிரிவுபசார விழா 

( வி.ரி. சகாதேவராஜா)

 கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த எட்டு வருடங்களாக சேவையாற்றி திருகோணமலை ஆதார வைத்தியசாலைக்கு இடமாறிச்செல்லும் தாதிய பரிபாலகர் என்.சசிதரனுக்கான  பிரிவுபசார விழா,  நேற்று(26.11.2026) வியாழக்கிழமை, வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் சிறப்பாக நெகிழ்ச்சியானநிலையில் நடைபெற்றது.

வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் பி.சிறிசங்கர் தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் ,சிறப்பதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் ஜி.சுகுணன் கலந்து சிறப்பித்தார் .

திருகோணமலையைச் சேர்ந்த தாதிய பரிபாலகர் என்.சசிதரன் தனது துணைவியாருடன் வந்து கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வில் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் பலர் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தனது அர்ப்பணிப்பான சேவை, பெறுமதியான பங்களிப்பு மற்றும் ஊக்கமளிக்கும் தலைமைத்துவத்தின் மூலம், வைத்தியசாலையில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தியவர் என நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அவரை பாராட்டினர்.

இந்நிகழ்வில், அவரது சேவையை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. தனது வாழ்வின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் அவருக்கு, அனைவரும் மனமார்ந்த நன்றிகளையும், சிறந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

விழா உணர்வுபூர்வமான உரைகள், நினைவுகள் பகிர்வு மற்றும் கௌரவிப்புகளுடன் இனிதே நிறைவு பெற்றது.

Leave a Reply