
நாங்கள் அரை உயிருடன் வாழ்கின்றோம். எமக்கு சர்வதேசம் தான் நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடும், மரணச் சான்றிதழும் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த அரசாங்கத்தின் சதி வலையில் நாங்கள் வழுக்கி விழமாட்டோம் என்பதை உறுதிபடக் கூறுகின்றோம் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.





