தொடர்கின்றது எரிவாயு அடுப்பு வெடிப்பு!

புதுக்குடியிருப்பு, வள்ளுவர்புரத்தில் உள்ள வீடொன்றில் நேற்று எரிவாயு வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வழமைபோன்று சமையல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது எரிவாயு அடுப்பு திடீரென வெடித்தது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக புதுக்குடியிருப்புப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதுடன், எரிவாயு சிலிண்டர் முகவருக்கும் தகவல் வழங்கப்பட்டது என்று வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

Leave a Reply