இலங்கை மீனவர்கள் 6 பேருக்கு விளக்கமறியல்!

கடந்த 16 ஆம் திகதி இந்திய எல்லை பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தெரிவித்து இந்திய கடலோர காவல் படையினர், 6 இலங்கை மீனவர்களையும் படகுடன் கைது செய்தனர்.

கைது செயப்பட்ட மீனவர்கள் இன்று ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

விசாரணைக்கு பின் நீதிபதி கவிதா வரும் ஏப்ரல் முதலாம் திகதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இவர்கள் அனைவரும் சென்னை புழல் சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

Leave a Reply