யாழில் பொலிஸாரின் மூர்க்கத்தனமான தாக்குதலில் காயமடைந்த இரு தாய்மார்கள் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் மூர்க்கத்தனமான தாக்குதலில் காயமடைந்த இரு தாய்மார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம், மட்டுவில் பகுதியில், பொருளாதார மத்திய நிலையத்தை திறப்பதற்கு வருகை தந்த நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் போராட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனை அவதானித்த பொலிஸார், போராட்ட பேரணியை தடுத்து நிறுத்துவதற்காக, தாய்மார் பயணித்த பேருந்தை தடுத்து நிறுத்தி, அவர்களை பேருந்துக்குள் சிறை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்ப நிலையால், பெண்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டு, அநாகரிகமாக நடத்தப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தால் கடுமையான உடல் உள பாதிப்புக்குள்ளான காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் ம.ஈஸ்வரி, வவுனியா மாவட்ட இணைப்பாளர் ஜெனிற்றா ஆகியோர், அந்தந்த மாவட்ட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply