பேருந்து மோட்டார் சைக்கிள் விபத்து- இளைஞனுக்கு நேர்ந்த கதி..!

வவுனியா ஈரப்பெரியகுளத்தில் கடற்படை பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்து பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவிலிருந்து ஈரப்பெரியகுளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஈரப்பெரியகுளம் சந்தியில் எதிரே வந்த கடற்படையின் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் சாரதி பலியாகியுள்ளார்.

மேலும் அனுஸ்க அபயரத்தின லக்மால் (வயது 28) என்ற இளைஞனே மரணமடைந்துள்ளவராவார்.

அத்தோடு இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை ஈரப்பெரியகுளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி சுகந்தன் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

Leave a Reply