
நாட்டின் அரசியில் சூழ்நிலை காரணமாக தனது கல்வி நடவடிக்கையில் பல சிக்கல்களை எதிர்கொண்ட ரத்தினசிங்கம் நரேந்திரன் என்பவர், தனது மருத்துவ படிப்பை நிறைவும் செய்வதற்கு சம்பத்தப்பட்டவர்களிடம் உதவிகோரியுள்ளார்.
தனது மருத்துவ கல்வி மற்றும் தனது பிரச்சனை தொடர்பில், யாழ் வந்திருந்த பிரதமரை சந்தித்து மகஜர் ஒன்றை கையளிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் சந்திக்க முடியவில்லை . இது தொடர்பாக அவர் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கையில்
ரத்தினசிங்கம் நரேந்திரன் ஆகிய நான் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டு, களனி பல்கலைக்கழகத்தில் படித்து வந்தேன்.
அப்போது விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டி அவர்கள் எனது படிப்பை குழப்பி விட்டார்கள். பின்பு நான் 2 தடவைகள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டேன்.
ஆனால், 2009 இல் யுத்தம் முடிந்ததற்குப் பின்னர், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடம் தருவதாக ஆடீடீள படிப்பதற்கு யாழ். மருத்துவ பீடத்தில் அனுமதிக்கப்பட்டேன்.
தொடர்ந்து படித்து கொண்டு வரும் போது, எனது வயதைக் காரணம் எனது படிப்பை இடையில் நிறுத்தி விட்டனர்.
எனக்கு தந்த வாய்ப்பை பயன்படுத்த அனுமதிக்கவில்லை. எனவே, அதற்கு நீதி கேட்டு பிரதம மந்திரியிடம் கடிதம் ஒன்றை கொடுத்த வந்த போது, கொரோனாவைக் காரணம் காட்டி அவரை சந்திக்க முடியாது என தெரிவித்து விட்டனர். மகஜரை தாங்கள் வாங்கி வைத்திருந்தார்கள்.
எனினும், அவரை நேரில் சந்திப்பதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வந்தேன்.
ஏனெனில், எனக்கு இதை விட்டால் வேறு வழியில்லை. எனது படிப்பை முடிக்க யாழ்.பல்கலையில் பேரவை முடிவாக உள்ளது. மூதவை முடிவாக உள்ளது. துணைவேந்தர் ஸ்ரீசந்குணராஜா முடிவாக உள்ளார்.
ஆனால், மருத்துவ சபை, இன்னும் எனது பிரச்சினைக்கு முடிவு கூறவில்லை. அதைப் பெற்றுத் தரும் படி கேட்டு நிற்கின்றேன் என்றார்.
1956 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு இப்போது 66 வயது ஆகிறது.பருத்தித்துறை ஹாட்லி கல்லூரின் ,மற்றும் முன்னர் இருந்த சென்ஜோன்ஸ் அக்கடமியில் தனது உயர் கல்வியை கற்றார்.
1991 ஆம் ஆண்டு களனி பல்கலைக் கழகத்தில் வைத்து புலிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னர், வத்தளை ,மற்றும் நீர் கொழும்பு ஆகிய நீதி மன்ற வழக்குகளில் இருந்தும் விடுக்கப் பட்டு 1997 ஆம் ஆண்டு அனைத்து வழக்குகளிலும் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.
2009 ஆம் ஆண்டு மீண்டும் யாழ் பல்கலையில் மருத்துவ படிப்பை தொடங்கும் நேரத்தில் மீண்டும் அவர் மீது புலிகளின் சந்தேக நபர் என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் குழம்பியது. தற்போது வரை அவர் கல்வி கற்று மருத்துவ படிப்பை நிறைவு செய்ய வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் பல்கலைக்கழக பேரவைக்கு தனக்கான நீதி கேட்டு செல்லவுள்ளார். அதிலும் சாதகமான முடிவு கிடைக்காவிடின் நீதி மன்றம் செல்லும் நோக்கில் நரேந்திரன் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





