சிறுவர்கள் கல்வியில் சிறக்க யூசிமாஸ் கற்கை நெறி உதவுகிறது! பயிற்சி முகாமையாளர் தெரிவிப்பு

மாணவர்களின் ஞாபகசக்தி ,செயற்திறன், கல்வி ஆகிய பல்வேறு செயற்பாடுகளை மேலும் விருத்தி செய்வதற்கு யூசிமாஸ் கற்கை நெறி உதவி செய்கிறது என குறித்த நிறுவனத்தின் பயிற்சி முகாமையாளர் இளமைநாதன் சித்திரா தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே தெரிவித்துள்ளார் :

மேலும் அவர் தெரிவிஸ்கியில்,
பல மருத்துவர்களின் ஆய்வுகளின் பின்னர் இந்தக்கற்கை நெறி ,மாணவர்களும் உதவுகிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த கற்கை நெறியை பின்பற்றுவது மூலம் கல்வி செயற்பாட்டின் வேகம் அதிகரிக்கும்.

ஆகவே தான் 4 வயது தொடக்கம் 14 வயது பிள்ளைக்களுக்கு மட்டும் இந்த கல்வி பயிற்றப்படுகிறது.

உதாரணமாக சொல்வதானால் 200 கணக்குகளை 8 நிமிடத்தில் செய்யக் கூடிய வகையில் இந்த கற்றல் முறை இருக்கும்.

8 படிமுறைகள் உள்ளன இந்த கல்வி முறையில்.8 ஆவது படிமுறை சர்வதேச தரத்தில் செயல் முறை பரீட்சைகள்,மலேசிய தலைமை நிறுவனத்தால் நடைபெற்று பட்டம் வழங்கப்படும்.

குழந்தைகளின் இடது பக்க மூளையில் உள்ள செயற்படு மையங்களை சிறுவயதில் இருந்து பயிற்சிகள் மூலம் வலுப்படுத்தி அவர்களின் ஆற்றலையும் வேகத்தையும் அதிகரிக்க செய்வதே இதன் நோக்கமாகும் என்றார்

Leave a Reply