‘மக்களுக்கு உணவு இல்லை – நாம் அரசியல் செய்து என்ன பயன்’? கீதா குமாரசிங்க

 நாட்டு மக்களுக்கு உண்பதற்கு உணவு இல்லையெனில், நாம் அரசியலில் இருந்து என்ன பயன், அவ்வாறானதொரு அரசியல் தேவையில்லை.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். உண்பதற்கு உணவு இல்லை. எதிர்காலம் பற்றி சிந்திக்காததால்தான் இப்படியான பிரச்சினைகள் உருவாகியுள்ளன. எனவே, அரசு மீது அதிருப்தி அடையாமல் இருக்க முடியாது. இதை சொல்வதால் ஆளுங்கட்சியினர் என்னை விமர்சிக்கலாம். அது பரவாயில்லை என்றும் கீதா குறிப்பிட்டார்.

Leave a Reply