மட்டு. கல்லடி வாவியில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு!

<!–

மட்டு. கல்லடி வாவியில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு! – Athavan News

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் உள்ள வாவியில் உயிரிழந்த நிலையில் பெண் ஒருவர் சடலமாக இன்று  (செவ்வாய்க்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி  பொலிஸார்  தெரிவித்தனர்.

குறித்த வாவியில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல்  வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று  வாவியில் தலைகுப்பபறமாக மிதந்த கறுப்பு நிறத்திலான நீளகாச்சட்டையும் சேட்டும் அனிந்த நிலையில் இருந்த சடலத்தை திருப்பியபோது அது ஒரு பெண் என அடையாளம் கண்டுகொண்டனர்.

இதில் மீட்கப்பட்ட சடலம் 25 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் எனவும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சடலத்தை பிரோத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.


Leave a Reply