பயங்கரவாத திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

கொழும்பு, மார்ச் 22: பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 51  மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

இந்த திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை முற்பகல் முதல் மாலைவரை இடம்பெற்றது.

இதன்படி, குறித்த சட்டமூலம் தொடர்பான  வாக்கெடுப்பில் ஆதரவாக 86 வாக்குகளும், எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி, இந்த சட்டம் 51 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.

இதையடுத்து, இடம்பெற்ற மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில், சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply