சர்வதேசத்தை திருப்திப்படுத்தவே திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டது! – எதிர்க்கட்சி

சர்வதேசத்தை ஆறுதல் படுத்துவதற்காகவே பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டு வந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வு இன்று முற்பகல் ஆரம்பமாகிய நிலையில், பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த சட்டமூலம் தொடர்பில் கருத்துரைப்பதற்கு முன்பாக ஒரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் வருடாந்த அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

வினாத்தாள்களை அச்சிடுவதற்கு காகிதம் இல்லை என்பதற்காக மேல் மாகாணத்தில் தவணைப் பரீட்சையை நடத்துவது பிற்போடப்படுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.

எனினும் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் வருடாந்த அறிக்கையை எடுத்துக்கொண்டால் அந்த அறிக்கையானது கடினமான தாள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆகக் குறைந்தது ஒரு புத்தகத்தை அச்சிடுவதற்கு 50,000 ரூபாய் செலவிடப்பட்டிருக்கும்.

செலவீனங்களைக் குறைக்குமாறு ஜனாதிபதி கூறுகின்றார். அர்ப்பணிக்குமாறும் கூறுகின்றார். அவர் அவ்வாறு கூறும்போதே அமைச்சுக்களின் அறிக்கைகள் கடினமான தாள்களைக் கொண்டு அச்சிடப்படுகின்றன.

,ந் நிலையில் பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. சட்டமூலத்தில் திருத்தம் என்பது கண்ணை கட்டும் செற்பாடு.- என்றார்.

Leave a Reply