இந்தியாவின் நிதியுதவி கிடைத்தமை அதிர்ஷ்டம்; பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க

கொழும்பு, மார்ச் 23

கஷ்டமான காலத்தில் இலங்கைக்கு இந்தியாவிடம் இருந்து நிதியுதவி கிடைத்தமை அதிஷ்டமானது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியா இப்படியான உதவியை வழங்கியது இதுவே முதல் முறை என்பதால், அது முக்கியமானது. இதனால், அந்த உதவி பற்றி தெரிவிக்க வேண்டிய கடமை அரசாங்கத் திற்கு இருக்கின்றது.

இந்தியாவின் இந்த உதவி தொடர்பாக நாட்டில் பல கதைகள் பரவி வருகின்றன. இதனால், வெளிவிவகார அமைச்சரோ, நிதியமைச்சரோ இந்த விடயம் தொடர்பாக தெளிவுப்படுத்த வேண்டியது அவர்களின் முக்கிய கடமை.

கஷ்டமான சந்தர்ப்பத்தில் நாட்டுக்கு உதவி செய்த பங்களாதேஷ் நாட்டுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன் என்றார்.

Leave a Reply