மரக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் உயிரிழப்பு!

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில்  மரக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 100 பேர் கடையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ள நிலையில், குறித்த சம்பவம் காரணமாக  11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply