நாட்டில் இனி ஒரு பொருளுக்கும் தட்டுப்பாடு வராது! அடித்துக் கூறுகிறார் பஸில்

நாட்டில் இனி ஒரு பொருளுக்கும் தட்டுப்பாடு வராது என பஸில் ராசபக்ச அடித்துக் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மேலும், எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனின் ஊடாக எரிபொருள் இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள், தொழில்துறை மூலப் பொருட்கள் ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்காக மேலும் 1500 மில்லியன் டொலர் கடன் கிடைத்துள்ளது.

இதன்படி நாட்டிற்கு தேவையான பொருட்கள் தற்போது இறக்குமதி செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply