
கிளிநொச்சி இரணைதீவு கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 07ம் ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இரணைதீவு கடல் பகுதியில் இன்று (24)அதிகாலை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகையும், அதிலிருந்து 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை செய்துள்ளனர்.
அதன் பின்னர், அவர்கள் கிளிநொச்சி மாவட்ட நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, பின் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து, குறித்த 12 பேரையும் எதிர்வரும் 07ம் ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

