நாளை மூன்றரை மணி நேர மின்வெட்டு – வெளியானது அறிவிப்பு

நாட்டில் நாளைய தினமும் மின்துண்டிப்பினை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி மின்சார அனுமதி சபைக்கு வழங்கியுள்ளது.

அதன் அடிப்அடையில் , A முதல் L வரையிலான வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலான தலா 3 மணிநேரமும் 20 நிமிடங்களும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியினுள் தலா ஒரு மணி நேரமும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், நாளைய தினம் P முதல் W வரையான வலயங்களில் காலை 8.30 முதல் 5.30 வரையான காலப்பகுதியினுள் 4 மணிநேரமும் 30 நிமிடங்களும், மாலை 5.30 முதல் இரவு 11 மணிவரை ஒரு மணிநேரமும் 50 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply