மானிப்பாய் பிரதேச சபையால் சத்துணவு வழங்கும் திட்டம் முன்னெடுப்பு!

வலிதென்மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுதிட்டத்தினூடாக நிதி ஒதுக்கப்பட்டு தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக மேற்கொள்ளப்பட்டுவரும் முதியோருக்கான சத்துணவு வழங்கும் திட்டம் நேற்றும் இடம்பெற்றுள்ளது.

குறித்த திட்டத்தின் கீழ் பண்டத்தரிப்பு 04ஆம் வட்டாரத்தில் முதியவர்களுக்கான சத்துணவு பொதிகள், பிரதேசசபை உறுப்பினர் அ.ஜோன் ஜிப்பிரிக்கோ தலைமையில் பண்டத்தரிப்பு கிராமசேவகர் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் பிரதேசசபையின் தவிசாளர் அ. ஜெபநேசன் மற்றும் கிராமசேவகர் பிரதீபன் ,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், முதியோர் சங்க செயலாளர் திரு குணாளன் மற்றும் மானிப்பாய் பிரதேசசபையின் பண்டத்தரிப்பு வட்டாரத்திற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரும் பயனாளிகளான முதியவர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply