40,000 தொன் டீசலை இலங்கைக்கு வழங்கும் இந்தியா

கொழும்பு, மார்ச் 25: இலங்கை அரசு விடுத்த அவசரவேண்டுகோளை தொடர்ந்து 40,000 தொன் டீசலை வழங்க இந்திய அரசு தீர்மானித்துள்ளது.

கடும் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை, அவசரமாக டீசலை வழங்குமாறு விடுத்த வேண்டுகோளை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது என ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, 40,00 தொன் டீசல் இலங்கைக்கு விரைவில் வழங்கவுள்ளது என இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவின் உள்ளுர் தேவைகளை கருத்திலெடுத்த பின்னர் இலங்கைக்கு தேவையான டீசலை அனுப்புவது குறித்து ஆராயப்படுகின்றது, இவற்றை அனுப்புவதற்கான கப்பல்களை ஏற்பாடு செய்வதும் பிரச்சினையாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply