
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாணக்கியன் கலந்துரையாடலுக்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்:
எங்கள் முடிவில் நாம் தெளிவாக இருக்கின்றோம். ஜனாதிபதி எங்களை ஏமாற்றுவதற்கு இடமளிக்க மாட்டோம்.
தமிழ் மக்களின் நிலைப்பாடு தான் எமது கோரிக்கைகளாக அமையும். எமது தேவைகள், கோரிக்கைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் செல்கின்றோம். என்றார்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறுவதாக இருந்து பிற்போடப்பட்ட இந்த சந்திப்பு, கடந்த 15ஆம் திகதி இடம்பெறவிருந்தது.அதன் பின்னரும் பிற்போடப்பட்டு குறித்த சந்திப்பு இன்றைய தினம் நடைபெறுகிறது.





