யாழில் சிலிண்டர் விநியோகத்தை ஆரம்பித்த பிரதேச செயலகங்கள் – கோபத்தில் மக்கள்!

நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, மக்கள் சிலிண்டர்களை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.

இந்த நிலையில் யாழில் பிரதேச செயலகங்கள் ஊடக, இன்று எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை அடுத்து சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் ஊடக ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும், தலா 10 சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதாக தெரியவருகிறது.

பிரதேச செயலக வளாகத்தில் மக்கள் சுமார் 5 மணி நேரமாக காத்து நிற்கின்றனர். இதுவரை எரிவாயு விநியோகம் நடைபெறவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வேலைகளை நிறுத்தி விட்டு, விடுப்பு பெற்று, காலையிலிருந்து தாம் இங்கு எரிவாயுவுக்காக காத்து நிற்கின்றோம் என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply