
சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் மேற்கொண்ட கண்காணிப்பின்போது பலவகையான போதைப் பொருட்களை மீட்டுள்ளனர்.
போதைப்பொருள் இருப்பதாக, சந்தேகத்தின் பேரில் 8 பார்சல்களை சோதனை செய்துள்ளனர். இதன் போது கஞ்சா உட்பட 32 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஜேர்மனி மற்றும் கனடாவில் இருந்து கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த பார்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக விசாரணைகளிருந்து தெரியவருகிறது.. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், அவை போலி முகவரிகள் என்பது தெரியவந்தது.
திறக்கப்பட்ட பார்சல்களில் மொத்தம் 1,590 கிராம் குஷ் (கஞ்சா) மற்றும் 601 எக்ஸ்டசி மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையின் முடிவில் போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.





