எரிவாயு விரைவில் சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும்: லிட்ரோ நிறுவனம்

கொழும்பு, மார்ச் 25

நாட்டை வந்தடைந்துள்ள 3600 மெட்ரிக் தொன் எரிவாயுவினை வெகு விரைவில் சந்தைகளுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இம்மாத இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் சுமார் ஒரு மில்லியன் எரிவாயு சிலிண்டர்களை சந்தைகளுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தற்போது நாட்டில் நிலவும் எரிவாயு வரிசை எதிர்வரும் இரு வாரங்களில் குறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 2,000 தொன் எரிவாயு அம்பாந்தோட்டையில் கையிருப்பில் உள்ளதாக லாஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் நாளொன்றுக்கு 4,000 – 5,000 சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக லாஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் போது வைத்தியசாலைகள் , தொழிற்சாலைகள் மற்றும் ஹோட்டல்கள் என்பவற்றுக்கே முன்னுரிமையளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடன் கடிதங்கள் விடுவிக்கப்பட்டவுடன் நாளாந்தம் 45,000 – 50,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் லாஃப் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply