ருமேனியாவில் இலங்கையர்கள் 16 பேர் கைது

ருமேனியா, மார்ச் 25

ருமேனியாவில் இருந்து பாரவூர்தி ஒன்றில் ஐரோப்பிய நாடொன்றுக்கு தப்பி செல்ல முற்பட்ட 16 இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ருமேனியாவின் நட்லாக் 2 எல்லை பகுதியில் பாரவூர்தியை சோதனைக்கு உள்ளாக்கப்பட்டபோது அதில் மறைந்திருந்த 16 இலங்கையர்கள் உட்பட 38 பேர் கைதாகினர்.

அவர்கள் கைது செய்யப்பட்ட சில நேரத்தில், குறித்த எல்லையை கடக்க முற்பட்ட, இத்தாலியில் பதிவு செய்யப்பட்ட கார் ஒன்றில் ருமேனியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த 2 பேர் கைதாகினர்.

ஏற்கனவே பாரவூர்தியில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையர்களுடைய ஆவணங்கள், அவர்களிடமிருந்து, மீட்கப்பட்டதாக ருமேனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் 22 முதல் 51 வயதுக்கு இடைபட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிருலும், அவர்கள் இலங்கையில் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்ற விபரங்கள் வெளியாகவில்லை.

Leave a Reply