
இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் கலாசார மையம் எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.
அன்றைய தினத்தில் மிகவும் எளிமையான முறையில் இந்த திறப்பு விழா செய்யப்படவுள்ளதுடன் காணொளி முறையில் திறந்து வைக்கப்படும்.
இன்றையதினம் இடம்பெற்ற யாழ் மாநகர சபை அமர்வில் இந்த தகவலை மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் வெளியிட்டார் என அறிய முடிகிறது.
இதேவேளை நேற்று இரவு யாழ்ப்பாண பண்பாட்டு மைய திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் யாழிற்கான இந்திய துணைத்தூதர், யாழ் மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
ஆனாலும் இதுவரை திறப்பு விழாவிற்கான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் சம்பந்தப்பட்ட தரப்புகளால் வெளியிடப்படவில்லை.





