மின் துண்டிப்பு நேரம் நீடிக்கப்படுகிறதா? வெளியானது அறிவிப்பு

அடுத்த வாரத்தில் மின் துண்டிப்பு நேரம் நீடிக்கப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அடுத்த வாரம் முதல் தினமும் 10 மணித்தியாலம் மின் தடை செய்யப்படும் என இதற்கு முன்னர் தகவல் வெளியாகியிருந்தது.

மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இன்று அறிவித்தார்.

இதனையடுத்து அடுத்த வாரம் மின் துண்டிப்பு நேரம் நீடிக்கப்பட மாட்டாது இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply