துஸ்பிரயோக குற்றச் செயல்களை தடுக்க முன்வாருங்கள்! – கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

சிறுவர் மற்றும் துஸ்பிரயோக குற்றச் செயல்களை எமது பிராந்தியத்தில் மேற்கொள்வதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது என கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.றம்சீன் பக்கீர் தெரிவித்தார்.

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை மற்றும் கல்முனைகுடி கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்கள் உருவாக்குவதற்கான கலந்துரையாடல் நற்பிட்டிமுனை அல் அக்ஸா ஆரம்ப பாடசாலை மற்றும் கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலய மண்டபத்தில் சமூக பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம் வாஹீட் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும்இ நான் இங்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளேன். என்றாலும் மக்களோடு மக்களாக இணைந்து மூவின மக்களின் ஐக்கியத்திற்காகவும் பாடுபட நான் விட்டுக் கொடுப்புகளுடன் செயற்பட தயார். ஆனால் எக்காரணம் கொண்டும் குற்றச் செயல்களை செய்வதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது.

எமது பொலிஸ் துறை சார்ந்தோர் ஏதாவது குற்றம் செய்தாலும் எனக்கு தெரியப்படுத்துங்கள்இ நிரூபிக்கப்பட்டால் எவ்வித தயவுகளுமின்றி அவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கல்முனை பிரதேசத்தில் குற்றச் செயல்கள் குறைவடைந்தாலும்இ இன்னும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையோர் இருந்து கொண்டே இருக்கின்றனர்.

நாட்டில் வறுமை மற்றும் அது போன்ற எந்த துன்பம் வந்தாலும் குற்றச் செயல்களை செய்ய அனுமதிக்க முடியாது. நாட்டின் சட்டமும் ஒழுங்கும் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.

சிறுவர் இளம் பெண்கள் துஸ்பிரயோகம் போன்ற பல குற்றச் செயல்களை நாம் நாளாந்தம் எதிர்கொள்கிறோம்.எனவேதான் சமூகத்திலுள்ள நாம் அணைவரும் இணைந்து இதனை ஒழிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மேற்படி கலந்துரையாடலில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கு பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கிராம சேவை உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply