
கொழும்பு, மார்ச் 26
எதிர்காலத்தில் பல புதிய காகிதத் தொழிற்சாலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எஸ். பி. திஸாநாயக்க கூறியதாவது,
வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை தரமுயர்த்துவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடியால் காகித உற்பத்திக்கான மூலப் பொருட்களை இறக்குமதி செய்வது தடைப்பட்டுள்ளது.
அதன் காரணமாக, வினாத்தாளை அச்சிட தேவையான தாள் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, நாட்டில் பாடசாலை மற்றும் உயர்கல்வி பரீட்சைகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





