தென்னாபிரிக்க நிறுவனத்துடன் மோசடியான ஒப்பந்தம் மின்சாரக் கட்டணம் கூடும்: சஜித்

கொழும்பு, மார்ச் 26

எரிபொருள்  தொடர்பாக தென்னாபிரிக்க நிறுவனமொன்றுடன் அரசாங்கம் பாரிய மோசடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், அந்த மோசடி ஒப்பந்தம் காரணமாக எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணம் நிச்சயமாக அதிகரிக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த ஊழல் ஒப்பந்தத்தின் மூலம் நடைமுறையில் உள்ள சந்தை விலையை விட அதிக விலைக்கும், நாட்டுக்குத் தேவையான அளவை விட அதிகமாக கொள்முதல் செய்யவும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாவும் எதிர்க்கட்சித் தலைவர் வெளிப்படுத்தினார்.

சிறுவர்களை டிஜிட்டல்  உலகில் தலைநிமிர்ந்து செயற்படும் நோக்கில் செயற்படுத்தப்படுகின்றன டிஜிட்டல்  வகுப்புக்கான நவீன கணனி  தொழில்நுட்ப திரைகள்  மற்றும் நவீன கணினிகளை வழங்கும் பிரபஞ்சம் திட்டத்தின் 20 ஆவது கட்டம், வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

அதன்பின்னர் அங்கு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியதாவது,

கூடுதலான அதிகாரம் கொடுத்ததின் விளைவுகளை மக்கள் அனுபவிக்க நேரிட்டது வருந்தத்தக்கதான விடயம் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மனச்சாட்சியற்ற அரசாங்கத்திடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்க முடியும்.

அதிகாரம் இருந்தோ அல்லது இல்லாமலோ சேவையாற்றும் பாரம்பரியத்தை ஐக்கிய மக்கள் சக்தி நாட்டிற்கு அறிமுகப்படுத்தி ஒரு புதிய கலாசாரத்தை உருவாக்கியதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்தும் தமது புண்ணிய பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றார்.

Leave a Reply