ஆலையடிவேம்பு பாடசாலை ஒன்றில் புகையிலைகளை துர்ளாக்கி பாவித்து விற்பனை செய்துவந்த தரம் 9 ம் ஆண்டு 5 மாணவர்கள் கைது  எச்சரித்து விடுவிப்பு 

(கனகராசா சரவணன்)

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் புகையிலைகளை துர்ளாக்கி அதனை ஏனைய மாணவர்களுக்கு விற்று வந்துள்ளதுடன் அதனை பாவித்து வந்த தரம் 9ம் வகுப்பில் கல்விகற்றுவரும் 5 மாணவர்களை நேற்று வெள்ளிக்கிழமை (25) பாடசாலையில் வைத்து கைது செய்து அவர்களின் பெற்றோரை வரவழைத்து அதில் 4 பேரை எச்சரித்து விடுவித்ததுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலையைச் சேர்ந்த இந்த மாணவர்கள் நீண்டகாலமாக புகையிலைகளை துர்ளாக்கி பாடசாலைக்கு கொண்டுவந்து ஏனையமாணவர்களுக்கு அதனை விற்பனை செய்துவந்துள்ளதுடன் அவர்களும் அதனை பாவித்துவருவதாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து சம்பவதினமான நேற்று குறித்த பாடசாலைக்கு பொலிசாருடன் பிரதேசசெயலாளர் முற்றுகையிட்டனர்.

இதனை தொடர்ந்து குறித்த வகுப்பு மாணவர்களை பொலிசார் சோதனையிட்ட நிலையில் இந்த புகையிலை தூள்களை 5 மாணவர்களிடமிருந்து மீட்டதுடன் அவர்களை கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த புகையிலை தூளை செற்றிங் என பெயர் சூட்டப்பட்டு அதனை பாவித்து வந்துள்ளதாகவும் இது ஒருவகையான மதுபோதையை ஏற்படுத்தும் பொருளாக இந்த புகையிலை தூளை பாவித்து அதற்கு சில மாணவர்கள் அடிமையாகியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதையடுத்து குறித்த மாணவர்களின் பெற்றேரை வரவழைத்து 4 மாணவர்களை எச்சரித்து நேற்று இரவு விடுவித்ததுடன் ஒரு மாணவனை கைது செய்துள்ளர்.இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Leave a Reply