அரிசியையும் பிரதேச செயலகங்கள் ஊடாக விநியோகிக்கப்போகிறார்களா? – யாழ்.வணிக சங்கம் கேள்வி

யாழ். மாவட்டத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகமும் இனிவரும் காலங்களில் பிரதேச செயலகங்கள் ஊடாகவோ நடைபெறும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளதாக யாழ் வணிகர் சங்கத்தின் தலைவர் ஆ.ஜெயசேகரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் “சமூகம் மீடியா”வுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

எரிபொருள் முகவர்களிடம் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்படட எரிபொருள் விநியோகம் சம்மந்தமான ஆலோசனைகளை பெற்று நாம் தொடர்ந்தும் கதைத்து வருகின்றோம். ஆனால் அதில் சாதக நிலைமைகள் குறைவாகவே காணப்படுகிறது.

உணவகங்களுக்கு, முகவர்கள் ஊடாக எரிவாயுவைய விநியோகித்தல் முறைமை சிறந்தது. பங்கீட்டு அடிப்படையில் ஒரு சுழற்சி முறையில் இது நடைபெற வேண்டும்.

தற்போதைய நிலையில் 5000 சிலிண்டர் வரவேண்டிய இடத்தில் , 1,000 சிலிண்டர்கள் வருமாயின் அதனை சில விதிமுறைகளுக்கு ஏற்ப வழங்க வேண்டும். அதற்கு மாற்றாக கூடிய விலையில் விற்பனை செய்தால் அதற்குரிய நடவடிக்கைளை மேற்கொள்ளலாம்.

பல வருடங்களாக பின்பற்றி வரும் பொறிமுறைகளை ஏற்ப எரிவாயு விநியோகஸ்தர்களிடம் நாம் கதைத்தோம், அதனை அவர்கள் செயற்படுத்தாமல் பிரதேச செயலகங்கள் ஊடாக விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இனி வரும் காலங்களில் பிரதேச செயலகங்கள் ஊடாக உணவுவிநியோகம் நடைபெறுமா என்ற கேள்வியும் தற்போது எழுத்துள்ளது.- என்றார்.

Leave a Reply