
கீவ், மார்ச் 28
உக்ரைனில் உள்ள லிவிவ் நகரம், ரஷ்யாவின் 2 ராக்கெட் தாக்குதலால் அதிர்ந்து போனது. இந்நிலையில் ஒரு ராக்கெட் பறந்து வந்து தாக்குவதைப் படம் பிடித்த ரஷ்ய உளவாளி என சந்தேகப்படும் ஒருவரை உள்ளூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதுபற்றி அந்த மாகாண கவர்னர் மேக்சிம் கோசிட்ஸ்கி கூறும்போது, “பிடிபட்ட நபர், ரஷ்ய ராக்கெட் தாக்குதல் இலக்கை படம் பிடித்துள்ளார். மேலும், இந்த பிராந்தியத்தில் உள்ள சோதனைச் சாவடிகளையும் அவர் தனது கைப்பேசியில் படம் பிடித்துள்ளார்.
இந்தப் படங்களை அவர் ரஷ்ய கைப்பேசி எண்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்” என குறிப்பிட்டார். மேலும் அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது





