
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு முகம்கொடுக்கும் வகையில் அமைச்சரவையின் எண்ணிக்கையை குறைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்மாதிரியாக செயற்பட்டால் நானும் எனது அமைச்சு பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இருக்கின்றேன் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ் தெரிவித்தார்.
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு முகம்கொடுக்க அமைச்சரவையின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் ஏனையவர்களுக்கு முன்மாதிரியாக அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகவேண்டும். அவ்வாறு அவர்கள் செய்தால் நானும் அதற்கு தயார் என்று தொிவித்தார்.

