
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதி அமைச்சரை இன்று சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் இந்தியாவின் ஆதரவு குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
எதிர்வரும் காலங்களிலும் இந்தியா, இலங்கைக்கு உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர், இதன்போது உறுதியளித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, இந்த சந்திப்பில் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

