கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர விடுதலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கொலைக்குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மேலும் இருவர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் பிரேமலால் ஜயசேகரவிற்கு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

இரத்தினபுரி – காஹவத்தை பகுதியில் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசார கூட்டத்தின் போது, துப்பாக்கி சூட்டு சம்பவமொன்றில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply