ஏப்ரல் 2 ஆம் திகதிக்கு பின்னர் நிலைமை சீராகும்: மின்சார சபை தலைவர்

கொழும்பு மார்ச் 31

ஏப்ரல் 2ஆம் திகதிக்குப் பிறகு மின்வெட்டு அமலாகும் நேரத்தைக் குறைக்கக் கூடியதாக இருக்கும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் கூறியதாவது,

எதிர்வரும் 2ஆம் திகதி எமக்கு ஒருதொகை டீசல் வருகின்றது. அந்த டீசல் மின்சாரந் சபைக்கு வழங்கப்படும் எனக் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது. எனவே, 2ஆம் திகதிக்குப் பிறகு தற்போதைய நிலைமை ஓரளவுக்குச் சீராகும்.

மின்வெட்டை 4 மணிநேரம்வரை குறைக்கக்கூடியதாக இருக்கும். எரிபொருள், மழைவீழ்ச்சி கிடைத்தால் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என்றார்.

Leave a Reply