2 மாதங்கள் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்! – மின்சார சபை எச்சரிக்கை

இரண்டு மாதங்கள் மின்சாரக்கட்டணம் செலுத்தப்படாவிட்டால் மின் இணைப்பினை துண்டிக்க முடியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்றூ நவமணி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

மின்சாரக் கட்டணம் தொடர்பில் சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் எனவும், அதனை வெளியிட்டு சில தினங்களில் மின்சார இணைப்பினை துண்டிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபைக்கு சுமார் 43 பில்லியன் ரூபா நிலுவைக் கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply