இலங்கைக்கு நிவாரணம் அனுப்புவது தொடர்பில் தமிழக முதல்வர் மோடியுடன் பேச்சுவார்த்தை

இலங்கைக்கு நிவாரணம் அனுப்புவது தொடர்பில் தமிழக முதல்வர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நிலை குறித்தும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, தமிழகத்தில் இருந்து உணவு, மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்ப முதல்வர் எம்.கே.ஸ்டார்லின் தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது .

இதேவேளை, அண்மையில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கடனாக பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply