
ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய இனந்தெரியாத குழுக்கள் ஏற்பாடு செய்யும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளது.
நாடாளாவிய ரீதியில் எங்கள் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து நாங்கள் உறுதியாக உள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 3ம் திகதி நாடு முழுவதிலும் உள்ள மக்களை வீதிக்கு இறங்குமாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக சில குழுக்கள் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன.
எரிபொருள் நெருக்கடி, மின்தடை, பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பிரதேசங்களிலும் 3ம் திகதி பிற்பகல் 3 மணிக்கு வீதியில் வந்து போராட்டம் நடத்த வேண்டும் என அந்தக் குழு அறிவித்துள்ளது.
அமைப்பு, கட்சி பேதமின்றி போராட்டத்தை நடத்தவுள்ளதாக அந்தக் குழுக்கள் தெரிவித்துள்ளன





