
வவுனியா தவசிகுளம் பகுதி வீடு ஒன்றிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் பொலிசாரால் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் இரு ஆண்களின் சடலங்கள் வவுனியாவில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.
மனைவியும் , பிள்ளையும் வைத்தியசாலை சிகிச்சைக்காக சென்றிருந்த நிலையில் குடும்ப தலைவர் இவ்வாறு தவறான முடிவெடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
51 வயதுடைய மருதலிங்கம் நிமல்ராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை வவுனியா சிவபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் இருந்தும் 35 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

